பேருல என்னதானுங்க இருக்கு?
அப்பாரு பேரு எலச்சிமுத்து.
அப்பச்சி பேரு தங்கராசு.அப்பத்தா பேரு மீனாட்சி.
அம்மச்சி பேரு ஆண்டாளு.
அப்பாவுக்கு அப்பாரு வச்ச பேரு ஆனந்தன்.
அம்மாவுக்கு அப்பச்சி வச்ச பேரு மகாலட்சுமி.
பெரிய அப்பாரு, பெரிய அப்பச்சி பேரோ
நாச்சிமுத்து, ரங்கசாமி..
அண்ணனுக்கு அப்பா வச்ச பேரு சந்தான கிருஷ்ணன்.
அக்காவுக்கு அம்மா வச்சபேரு
மல்லிகா.
தம்பிக்கும், எனக்கும்
அம்மா, அப்பா சேர்ந்து வச்ச பேரு
சதாசிவம். சோமசுந்தரம்...
ஆனா ஊர்க்காரங்க எங்களுக்கு
வச்சாங்க பாரு பேரு...
செம்பட்டை,
சொம்பச்சி,
மொசுவன்,
மொசுவத்தி,
மொழுக்கன்,
மொழுக்கச்சி,
கூளையன்,
குள்ளன்,
நெட்டையன்,
குட்டையன்,
கட்டையன்,
டேய்...பெரிய பையா,
டேய்.... சின்னப்பையா,
ஏ...பெரிய புள்ள,
ஏய்...சின்னப்புள்ள,
அட பேருல என்னதானுங்க இருக்கு?!
